Gallery Section

 

நிகழ்ச்சி விவரங்கள்:


          புத்தக வெளியீட்டு விழா: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையைச் சேர்ந்தவர் பிரபல பெண் கவிஞர் நீரோடை மலிக்காபாருக். இவர் ஆயிரக்கணக்கான கவிதைகள் கொண்ட நூற்றுக்கணக்கான புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இவருக்கு அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் பல்வேறு அமைப்புகள் விருதுகள் வழங்கி உள்ளது. இந்த நிலையில் அவர் தற்பொழுது எழுதிய ‘பூக்கவா புதையவா’ என்ற பிரபல கவிதை புத்தக வெளியீடு விழா நமது ரஹ்மத் பள்ளியில் நடைபெற்றது. இதில் பிரபல எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் கலந்துக் கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். அதனை ரஹ்மத் அறக்கட்டளை நிறுவனர் முஸ்தபா பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் ரஹ்மத் பள்ளி முதல்வர் சகுந்தலா, துணை முதல்வர் உமா மகேஸ்வரி, முன்னால் முஸ்லிம் ஜமாத் தலைவர் பசீர் அகமது, இலக்கிய மன்ற செயலாளர் ராஜ்மோகன், செயலாள் செல்லதுரை, கவிஞர் யாகூப் அலி உட்பட பலரும் கலந்துக் கொண்டனர். படம் செய்தி: முத்துப்பேட்டையில் பிரபல பெண் கவிஞர் நீரோடை மலிக்காபாருக் எழுதிய ‘பூக்கவா புதையவா’ என்ற பிரபல கவிதை புத்தகத்தை பிரபல எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் வெளியிட்டார். அதனை ரஹ்மத் அறக்கட்டளை நிறுவனர் முஸ்தபா பெற்றுக் கொண்டார்.