திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில்
புதன்கிழமை நடைபெற்ற 21 ஆம் அண்டு ஆண்டுவிழா மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளுடன் துவங்கியது. பட்டிமன்ற பேச்சாளர் திரு.ராஜா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பட்டிமன்றத்திற்கு தலைமை தாங்கி விழாவை சிறப்பித்தார்.
பணிஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை திருமதி.சகுந்தலா அவர்களுக்கு பள்ளியின் தாளாளர் திரு.M.A.முஸ்தபா பட்டிமன்ற பேச்சாளர் திரு.ராஜா மற்றும் முன்னாள் ஒன்றியகுழு உறுப்பினர் திரு.கல்யாணசுந்தரம், சிங்கப்பூர் சிராங்கூன் டைம்ஸ் ஆசிரியர் திரு.ஷா நவாஸ் ஆகியோர் நினைவுப்பரிசு வழங்கி சிறப்பித்தனர்.